Inicio Las Llaves Otros idiomas திறவுகோல்களை ஆராய்தல்
Traducción en preparación.

1_Intro.png

திறவுகோல்களை ஆராய்தல்

எல்லோராலும் மஹாராஜி என்று அழைக்கப்படும் பிரேம்ராவத் உள் அமைதியைக் கண்டுகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு செயல் முறையான வழி ஒன்றை அளிக்கிறார். அதை ஞானம் என்று அழைக்கிறார்.

பிரேம் ராவத் ஞான வழிமுறையைப் பற்றி சொல்வது:

நான் அளிப்பது வெறும் சொற்களை விட அதிகமானது. உள்ளே உள்ள அமைதியையும் நிறைவையும் சென்றடைய வழிமுறை அளிக்கிறேன். அதை நான் ஞானம் என்று அழைக்கிறேன். சூழ்நிலைகளிலிருந்து தனிப்பட்டு வாழ்க்கையின் ஆனந்தத்தை அனுபவிப்பதை ஞானம் சாத்தியமாக்குகிறது. உள்ளே உள்ள ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள அது ஒரு வழிமுறையாகும்.

ஞான வழிமுறை நான்கு பயிற்சி முறைகளைக் கொண்டது. அவை ஒருவர் தன் கவனத்தை வெளியிலிருந்து திருப்பி உள்ளே கொண்டு செல்ல உதவுகின்றன. அது கற்பனையோ, ஒரு தோற்றத்தை காண்பதோ இல்லை. உள்ளே ஏற்கனவே உள்ளதில் கவனம் செலுத்த அது ஒரு செயல்முறையான வழியாகும்.

ஞானத்தின் பயணம் தன்னைக் கண்டுகொள்ளும் பயணமாகும். இந்தப் பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு நான் ஞானத்தின் பயிற்சி முறைகளைக் கற்க அவர்கள் தயாராவதற்கு உதவுகிறேன், மேலும் வாழ்நாள் முழுவதும் ஆனந்தம் அனுபவிக்க நான் தொடர்ந்து தூண்டுதலும் வழி காட்டுதலும் அளிக்கிறேன்.

திறவுகோல்கள் [சாவிகள்]

திறவுகோல்கள் [சாவிகள்] இந்த சாத்தியத்தைப் பற்றிய முக்கியமான விஷயங்களைப் [பாயின்டுகளைப்] புரிந்துகொள்ள வடிவமைக்கப் பட்ட தொடர் வீடியோக்களாகும். ஆறு திறவுகோல்கள் [சாவிகள்] உள்ளன. முதல் ஐந்து திறவுகோல்களில் ஒவ்வொன்றிலும் மஹாராஜியின் சிறப்பு உரையும், துணையான வீடியோக்களும் அடங்கும். இந்த வீடியோக்களைப் பார்ப்பதால் ஒருவர் ஞானத்தின் பயிற்சி முறைகளைப் கற்றுக் கொள்வதற்கு முன், அவசியமான புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆறாவது திறவுகோல் ஒரு விசேஷ கூட்டத் தொடரில் [விசேஷ தனிப்பட்ட நிகழ்ச்சியில்] காண்பிக்கப்படுகிறது. இதில் மஹாராஜி வீடியோ காட்சி மூலம் ஞானத்தின் பயிற்சிமுறைகளைக் கற்பிக்கிறார். இம்மாதிரி கூட்டத் தொடர்கள் வருடம் முழுவதும் உலகெங்கிலும் நடத்தப் படுகின்றன.

 

திறவுகோல்களுக்கு அறிமுகம்

Traducción en preparación.

வீடியோவைப் பாருங்கள் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாயங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

 

  • 1. தொடக்கம்
    தொடக்கம்
    2:30 நிமிடங்கள்
  • 2. தயாராவது
    தயாராவது
    1:22 நிமிடங்கள்
  • 3. திறவுகோல்கள் என்றால் என்ன்?
    திறவுகோல்கள் என்றால் என்ன்?
    1:44 நிமிடங்கள்
  • 4. வழி காட்டிகள்
    வழி காட்டிகள்
    7:43 நிமிடங்கள்
  • 5. உயிர்வாழ்வின் நினைவு
    இவ்வாழ்க்கையை நினைவு  கொள்ளுங்கள்
    12:42 நிமிடங்கள்
  • 6. இன்ஸைட்ஸ்
    இன்ஸைட்ஸ்
    5:48 நிமிடங்கள்
  • 7. தொலைபேசி நேர்காணல்
    தொலைபேசி நேர்காணல் (இன்டர்வியூ)
    3:02 நிமிடங்கள்
  • 8. இசை வேளை
    இசை வேளை
    4:44 நிமிடங்கள்
  • 9. கேள்விகளும் பதில்களும்
    கேள்விகளும் பதில்களும்
    12:20 நிமிடங்கள்
  •  
  • திறவுகோல்களைப் பெறுங்கள்
  • திறவுகோல்களைப் பற்றிய விவரங்களுக்கு Esta dirección electrónica esta protegida contra spambots. Es necesario activar Javascript para visualizarla உடன் தொடர்பு கொள்ளவும்.

வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

 
உள்ளே
Traducción en preparación.

எல்லோருக்கும் கனவுகள் இருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உண்மை எந்தக் கனவையும் விட அழகாக இருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது, “நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உள்ளே இருக்கிறது. உங்கள் உண்மை உள்ளே இருக்கிறது. உங்கள் சாந்தி உள்ளே இருக்கிறது.

இந்த விஷயங்களை உணர இருக்கும் ஆசையைத் தான் நான் தாகம் என்கிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாக [உள்ளார்ந்த] ஒரு தாகம் உள்ளது. அது எளிமையானது, நிஜமானது. — ஆனந்தத்திற்காக, சாந்திக்காக, திருப்திக்காக உள்ள தாகம். உள்ளே ஏற்கனவே இருக்கும் ஏதோ ஒன்றிற்காக அந்த தாகம் உள்ளது . நமக்கு அமைதியை உணர, நிறைவை உணர அந்த தாகம் இருக்கிறது.

இதயத்தில் வசிக்கும் அமைதியை சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் உணர முடியும் - ஒருவன் ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் , நல்லவனாக இருந்தாலும் , கெட்டவனாக இருந்தாலும், சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும். இது ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்புரிமை.

ஏற்றுக்கொள்வது
Traducción en preparación.

நாம் தேடிக் கொண்டிருப்பது நம் உள்ளே தான் உள்ளது, வெளியே இல்லை. உள்ளே நாம் அமைதியை, சாந்தத்தை, எளிமையான ஆனந்தத்தைக் கண்டுகொள்ள முடியும்.

அமைதி கிடைத்தால் அது ஒரு நல்ல விஷயம் என்பது மட்டுமல்ல, அதை நாம் உணர வேண்டியது அவசியம். நமக்கு நம் வாழ்க்கையில் அமைதி என்னும் உறுதியான தளம் தேவை. அதனால் தான் இந்த பயணம் முக்கியமானது.

நாம் தேடுவது நம் உள்ளே தான் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள எவ்வாறு நாம் நம்மை தயார் செய்துகொள்ளப் போகிறோம்? முதலில் நாம் வெளியே உள்ள கவனத்தைக் கலைக்கும் ஓசைகளை குறைக்க வேண்டும், அதன் மூலம் வெளியிலிருந்து வருவதற்கும், உள்ளே உணரக்கூடியதற்கும் உள்ள வித்தியாசத்தை நம்மால் அறிய முடியும்.

அந்த வித்தியாசத்தை உணரத் தொடங்கும் போது நாம் தேடும் அமைதி, அந்த அழகு, அந்த ஆனந்தம், ஏற்கனவே உள்ளே உள்ளது என்பதைப் பார்ப்பது எளிதாகிக் கொண்டு போகிறது. பிறகு உள்ளே ஒரு உலகம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

அனுபவம்
Traducción en preparación.

நாம் அனுபவம் செய்யப் படைக்கப் பட்டிருக்கிறோம். நாம் வியப்புக்குரிய, அனுபவம் செய்யும் இயந்திரங்கள். நம்மால் வெப்பத்தையும் குளிர்ச்சியையும் அனுபவம் செய்ய முடியும். நம்மால் மகிழ்ச்சியையும் சோகத்தையும் அனுபவம் செய்ய முடியும்.

நீங்கள் இந்த அற்புதமான அனுபவம் செய்யும் இயந்திரத்தை உள்ளே இருப்பதுடன் இணைத்தால் அமைதி, ஆனந்தம், சந்தோஷம் இவற்றை அனுபவிப்பீர்கள்.

இந்த அனுபவம் உணரப் பட வேண்டியது அவசியம். உங்களால் அதை உருவாக்க [உண்டாக்க] முடியாது. சந்தோஷத்திற்கான அடையாளங்களோ வரையறைகளோ இதயத்தைத் திருப்திப் படுத்தாது. சந்தோஷம் உணரப் பட வேண்டும். இதயம் அமைதியை உணர்வது அவசியம்.

உங்கள் இதயம் சாந்தத்தையும் அழகையும் உணர்கிறதா? அல்லது வெறுமையை உணர்கிறதா? அந்த வெறுமையுணர்வு போகவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் இதயம் உள்ளேயே உள்ள நிறைவை உணரட்டும்.

நீங்கள் சாந்தத்தை உணர முடியும். நீங்கள் அழகை உணர முடியும். அதைப் பற்றியதுதான் ஞான வழிமுறை.

இதயம் நீதிபதியாக இருக்கட்டும்.
Traducción en preparación.

ஒருவேளை நம் வாழ்க்கையில் நமக்கு இதயத்தை செவிமடுக்க நேரம் இருந்திருக்காது. நிறைய விஷயங்கள் நடந்திருக்கலாம், நாம் பிஸியாக [பரபரப்பாக வேலைகளில் ஈடுபட்டிருப்போம்] இருந்திருப்போம். இளம் பருவத்தில் நாம் (பிஸியாக) சுறுசுறுப்பாக இருப்போம். கொஞ்சம் வயதாகும் போதும் பிஸியாக [வேலைகளில் ஈடுபடுகிறோம்] இருக்கிறோம். இன்னும் வயதாகிறது அப்போதும் பிஸியாக இருக்கிறோம். பிஸியாக இல்லாத சமயத்திற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். நாட்கள் கழியக் கழிய வெளியில் உள்ள விஷயங்கள் இன்னும் சிக்கலாகின்றன.

நாம் எதைத் தேடுகிறோமோ அது மிகவும் எளிமையானது. நாம் எளிமையானவர்கள். இதயம் எளிமையானது. எதை இதயம் விரும்புகிறதோ அது அழகானது - ஆனந்ததை மட்டும் அது விரும்புகிறது.

இது சுயநலமாக இருப்பதல்ல. ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாகவே ஆனந்தத்தை அனுபவம் செய்ய ஒரு ஆசை இருக்கிறது. அதனால் தான் இது சுயநலம் இல்லை. அமைதியிலிருப்பதற்கான தாகத்தை நாம் உண்டாக்கவில்லை. அந்த தாகம் ஏற்கனவே அங்குள்ளது. அது உணரப் பட வேண்டும்.

இதயத்தை செவிமடுங்கள். அது நீதிபதியாக இருக்கட்டும், மற்றவர்கள் இல்லை. நம்மால் இதயத்தைக் கேட்காமல் இருந்துவிட முடியுமா?

வீடு
Traducción en preparación.

ஞானவழி முறை பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை. நம் வாழ்க்கையில் சூழ்நிலைகளை மேலும் நன்றாக ஆக்குவதற்கும் இல்லை. எங்கு அமைதியையும், ஆனந்தத்தையும் அனுபவம் செய்வது சாத்தியமோ அங்கு நம் கவனத்தை உள்நோக்கிக் கொண்டு செல்வதற்கு மட்டும்தான் ஞானம்.

அனுபவம் அடிப்படையானது, ஆகவே இது அடிப்படையான ஞானம். இது தன்னையே அனுபவம் செய்யும் ஞானம் என்பதால் இது ஆத்மஞானம்.

அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவம் செய்வது இப்பொழுது எனப்படும் இந்தக் கணத்தில் தான் சாத்தியம். அதில் தான் நாம் நிஜத்தில் வாழ்கிறோம். நாம் எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்ய முயற்சி செய்யலாம், அல்லது இறந்த காலத்தைப் பற்றி நினைவு கொள்ளலாம். ஆனால் நம்மால் ஒரு சிறு நொடி நேரம் கூட எதிர்காலத்திலோ இறந்தகாலத்திலோ வாழமுடியாது. இப்பொழுது எனப்படும் இத்தருணம் தான் நம் வீடு. அங்கு தான் நாம் நிஜத்தில் வாழ்கிறோம். அதனால் தான் ஒவ்வொரு கணமாக வாழ்க்கையை அனுபவிப்பது மிக முக்கியம்.

அற்புதமான உண்மை
Traducción en preparación.

நிறைவுக்கான தாகம் நம் வாழ்வில் தெளிவாக இல்லை என்றால் சுற்றி எங்கும் தண்ணீர் இருந்தாலும் நமக்கு அது நமக்கு முக்கியமாக இருக்காது. பாலைவனத்தின் நடுவில் தாகத்தால் தவிக்கும்போது அரை தம்ளர் தண்ணீர் கூட மிக மதிப்புள்ளதாக இருக்கும். பாலைவனத்தில் இருக்கும் ஒருவன் முன்னால் உலகில் உள்ள தங்கம் முழுவதையும் வையுங்கள், அரை தம்ளர் தண்ணீரையும் வையுங்கள், அவன் எதை நோக்கிப் போகிறான் என்று பாருங்கள்.

நம் தாகம் தெளிவாக இருக்கும்போது, எல்லாம் அர்த்தமுள்ளதாக ஆகிறது. மர்மங்கள் ஏதும் இல்லை, எண்ணக் கருத்துகள் ஏதும் இல்லை, சந்தேகங்கள் ஏதும் இல்லை. கேள்விகள் பிறகு இருப்பதில்லை. நாம் நம்மை பளிங்கு போல் தெளிந்த, தெளிவு என்னும் நீரில் நீந்திக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். நாம் நம்மை அதில் இருக்க விட்டுவிடலாம். நாம் இன்புறலாம். திரும்பவும் ஒரு முறை, நாம் எவ்வாறு இருக்க வேண்டுமோ, உண்மையில் நாம் யாரோ அப்படி இருக்க முடியும்.

இது நாம் கற்க வேண்டிய ஒன்றல்ல. இது நாம் திறந்து பார்க்க வேண்டிய ஒன்று. கண்டுகொள்ள வேண்டிய ஒன்று.

நம் வாழ்க்கை அற்புதமான உண்மை. ஒரு அற்புதமான உலகில் நாம் அற்புதமான உண்மை. உள்ளே எல்லையில்லா அமைதி உள்ளது. உள்ளே எல்லையில்லா ஆனந்தம் உள்ளது. அது பழமையில் இல்லை, அது நவீன அறிவியலிலும் இல்லை.

அது உள்ளே உள்ளது. ஒவ்வொரு மனிதரின் இதயத்தினுள்ளேயும் உள்ளது.

எளிமையானது
Traducción en preparación.

உண்மையில் பார்த்தோமானால் வாழ்க்கை எளிமையானது.

மூச்சு எளிமையானது. ஞானம் மிக எளிமையானது.

ஞானவழிமுறையைப் புரிந்து கொள்வது மிக மிக எளிது. எளிமையானது என்பது செய்யவேண்டிய ஒரு செயல்முறை அல்ல, திறக்க வேண்டிய ஒரு செயல் முறையாகும். அது ஒரு கற்கும் செய்முறை அல்ல, அது கற்றதை நீக்கும் செய்முறையாகும், ஏற்கனவே உள்ளதை கண்டுகொள்வதாகும்.

அது புதியவற்றை கொண்டுவரும் செயல்முறை அல்ல, அது வேண்டாதவற்றை நீக்குவதாகும். தேவையில்லாதவற்றை, வேண்டாதவற்றை நீக்கிவிடு. ஒரு சிற்பி, கல்லினுள் உள்ள சிலைவடிவத்தை, மூடியிருக்கும் பாகங்களை செதுக்கி, வேண்டாத பகுதிகளை நீக்கும் போது, அழகான சிலை வெளிப்படுவது போல. அப்போது உங்களிடம் அந்த அழகான ஜொலிக்கும் வைரம் மட்டும் இருக்கும் – உயிர் வாழ்க்கை

பயணம்
Traducción en preparación.

இந்தப் பயணத்தில், கவனம் செலுத்துவதற்கு, புரிந்துகொள்வதற்கு, உள்ளே உள்ள அந்த இடத்தை கண்டுகொள்ள ஆர்வத்துடன் இருப்பதற்கு, முயற்சி தேவைப் படுகிறது. நம் வாழ்க்கையில் நாம் எடுத்துள்ள பயணங்கள் எல்லாம் நம்மிடமிருந்து விலகியே கொண்டு சென்றிருக்கின்றன.

இந்தப் பயணம் எங்கு கொண்டு செல்கிறது? உள் அனுபவத்திற்கு. இது உங்களிடமே திரும்பிப் போகும் பயணம். உங்களிடம் மாத்திரம்.

அதனால் தான் இந்தப் பயணம் அழகாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது, மாத்திரமல்ல இது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பது கூட.

அதற்காகவே ஞானம் ஒரு பயணம்,

குறிக்கோள் பயிற்சி முறைகளைக் கற்றுக் கொள்வது மட்டுமல்ல, ஆனால் இவ்வாழ்க்கையில் இன்புறுவது, ஒவ்வொரு மூச்சிலும் இன்புறுவது, ஒவ்வொரு நாளும்.

பயணமே சேருமிடம்.

இது நிஜத்தில் ஒரு வாழ்நாளின் பயணம்.