Accueil Vidéos Autres langues தமிழ்
தமிழ்

Sydney_2011.png
சிட்னி, ஆஸ்ட்ரேலியா

“தெளிவு ரசிக்கப் படுவது இங்கே தான். சொர்க்கம் உணரப் படுவது இங்கே தான். இங்கு தான், ஆனந்தம் நடனமாடும் போது, உணர்வு வெளிப் படுகிறது. புன்னகைகள் இங்கு தான் மலர்கின்றன. துக்கம் ஏற்படுவது இங்கே தான், சிரிப்பும் இங்கே தான் நிகழ்கிறது. உணர்வை வெளிப்படுத்த தலை சிறந்த கருவி இது தான். உள்ளேயிருந்து ஏற்றப்படும் போது இது ஒளிமயமாகிறது.”

காலம்: 61 நிமிடங்கள்
செப்டம்பர் 6, 2011

 

padua.png
உள்ளே உள்ளதைத் தேடுதல் - பெடோவா இத்தாலி

“உங்கள் உள்ளே உள்ள அந்த அழகை, அந்த அமைதியைக் கண்டுகொள்ள ஒரு வழி உள்ளது. உங்கள் தாகத்தை நீங்கள் கண்டுகொள்வது மட்டும் தான் அதற்குத் தேவை. நீங்கள் தேடிக் கொண்டிருப்பது உங்கள் உள்ளே உள்ளது. நீங்கள் அந்த ஆனந்தத்தில் இருக்கவேண்டும். ஏனென்றால் அந்த அமைதியில் இருக்கும்பொழுது நீங்கள் அழகாக தோற்றமளிக்கிறீர்கள்.”

24 ஜூன் 2010 ல் ப்ரேம் ராவத் இத்தாலி குடியரசு, மினிஸ்ட்ரி ஆஃப் ஜஸ்டிஸ், வெனிடோ ரீஜன், ப்ராவின்ஸ் ஆஃப் பெடொவா இவற்றின் தலைவரின் ஆதரவில் உள்ள தியேட்டர் வெர்டி ஆஃப் பெடோவாவில் பேச அழைக்கப் பட்டார்.

காலம் 26 நிமிடங்கள்
ஜூன் 24 2010

 

Brighton_2011.png
பிரைட்டன், இங்கிலாந்து

“ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமாக இருக்கவேண்டும். ஒவ்வொருநாளும். ஒவ்வொருநாளும் இந்த மூச்சு வந்தது என்பதின் மதிப்பைப் பற்றிய புரிந்துணர்வு இருக்கவேண்டும்.”

காலம்: 51 நிமிடங்கள்.
ஜூன் 17, 18, 2011

 

brussels_2010.png
புருஸெல்ஸ் ஐரோப்பா பார்லிமென்டில் பிரேம் ராவத்

“தனிமனிதர்களுக்குத் தான் அமைதி தேவை, தனி மனிதர்களின் இதயத்தில் தான் அமைதிக்கான ஆசை குடி கொண்டுள்ளது, தனி மனிதர்களின் அரங்கில் தான் அமைதி நடனம் ஆடவேண்டும்.”

யூரோப்பியன் யூனியனின் முதல் வைஸ் பிரஸிடென்ட் கியானி பிட்டெல்லாவால், பிரேம் ராவத், அவருடைய அமைதியின் செய்தியைப் பகிர்ந்து கொள்ள புருஸெல்ஸில் நடைபெற்ற “ஐரோப்பாவிற்காக அமைதியின் சொற்கள்” என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டார்.

காலம்: 24 நிமிடங்கள்.
ஜூன் 29, 2010.

 

Sao_Paulo_2011.png
ஸாவோ பௌலோ, பிரேசில்

“உங்களுடைய அன்பில் எளிமையை சேருங்கள், அந்த அன்பு தூய்மையாகி விடும். அது சிக்கலானது இல்லை. நீ அதைச் செய், நான் இதைச் செய்கிறேன் என்பது போல் இல்லை. அன்பு. எளிமை. பிறகு திடீரென்று, நீங்கள் ஏதோ ஒன்றை உணரமுடியும். அந்த ஒன்றை உணர்ந்து இன்புற முடியும். அந்த ஒன்று உங்கள் இதயத்தைத் தொடுவதை உணர முடியும்.”

காலம்: 48 நிமிடங்கள்.
ஏப்ரல் 17, 2011

 

Barcelona_april_2011.png
பார்ஸிலோனா, ஸ்பெயின்

“உங்களுக்கு இருக்கக் கூடிய ஒவ்வொரு பிரார்த்தனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழப்பத்திற்கும் தீர்வு உங்கள் உள்ளே வைக்கப்பட்டுள்ளது – ஆனால் நீங்கள் அதை அறியவில்லை, அவ்வளவு தான்.”

காலம்: 69 நிமிடங்கள்.
ஏப்ரல் 3, 2011

 

 

Delhi_Day_1_2010.png
டில்லி, இந்தியா – முதல் நாள்

“உண்மை என்ன? இங்கு நீங்கள் அமைதியைக் காண்பீர்கள். உங்களுக்கு அமைதி தேவை. அது தான் உண்மை. உண்மையின் அனுபவம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படாதவரை, நீங்கள் என்ன செய்தாலும், பூர்த்தியில்லாமல் தான் இருப்பீர்கள”

காலம்: 19 நிமிடங்கள்.
நவம்பர் 7, 2010

 

 

Shah_Alam_1_2011.png
ஷா ஆலம், மலேஷியா – முதல் நாள்

“துக்கம் உங்கள் கண்ணோட்டம் தான். பயம் உங்களுடைய எண்ணக்கருத்து மட்டுமே – எப்படி நீங்கள் ஒன்றைப் பார்க்கிறீர்கள் என்பது.”

காலம்: 54 நிமிடங்கள்.
பிப்ரவரி 16, 2011

 

Malibu_2011.png
மேலிபூ, கலிபோர்னியா

“நிலைமாற்றம் ஏற்பட அதிக சமயம் எடுப்பதில்லை. எடுப்பதில்லை. புரிந்துகொள்ளுதல் மட்டும் தான் தேவை. அந்தப் புரிந்துகொள்ளுதல் ஏற்பட்டுவிட்டால், நிலைமாற்றமும் ஏற்படும். அந்த நிலைமாற்றம் நல்லதிற்காக, மேலும் சிறப்பானதிற்காக, அழகான ஒன்றிற்காக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.”

காலம்: 64 நிமிடங்கள்.
பிப்ரவரி 5, 2011

 

Bristol_2009.png
ஒரு மனம் திறந்த உரையாடல்.

சில உற்சாகத்துடன்  கூடிய பல்கலைக் கழக மாணவர்களும், இளம் தொழில் அதிகாரிகளும் பிரேம் ராவத்துடன்,  உலகில் அவர் ஆற்றி வரும் பணியைப்  பற்றி வெளிப்படையாக உரையாட ஒரு வாய்ப்பிற்காக வேண்டுகோள் விடுத்தனர். 

காலம்: 62 நிமிடங்கள்.
ஜூலை 23, 2009 அன்று  இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டலில்  ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. 

 

Delhi_2010.png
டெல்லி, இந்தியா – 2ம் நாள்

“சொர்க்கம் என்று ஒரு இடம் இருக்கிறது. இருக்கிறது, மேலும் அது இங்கு தான் இருக்கிறது. இந்த சொர்க்கத்திற்குப் போக நீங்கள் இறக்கத் தேவையில்லை. நீங்கள் உயிருடன் உள்ள போதே இந்த சொர்க்கத்தில் பிரவேசிக்கலாம்.”

காலம்: 42 நிமிடங்கள்
நவம்பர் 8, 2010.

 
<< Début < Préc 1 2 Suivant > Fin >>

Page 1 sur 2