Photo courtesy of TimelessToday

நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி பற்றிய முக்கியமான தகவல்களுக்கு இந்தப் பக்கத்தை கவனமாகப் படியுங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் திட்டமிடும்போது இந்தத் தகவலை அவதானமாக பார்க்கவும்.

**இன்னும் சில இருக்கைகளே உள்ளன! உடனே பதிவு
செய்யுங்கள்
**

எப்போது? எங்கு?

திகதி : ஜூன் 8, 2024 சனிக்கிழமை

நேரம்: நிகழ்ச்சி தொடங்கும் நேரம் மாலை 4:00 மணி (BST). மதியம் 2:00 மணிக்கு மண்டபத்தின் கதவுகள் திறக்கப்படும். முடியும் நேரம் சுமார் மாலை 6:00 மணி.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: The Brighton Centre

முகவரி: Kings Road, Brighton East Sussex, BN1 2GR.

செல்லும் வழி,வாகனத்தரிப்பிடம் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற விபரங்களுக்கு

யாரெல்லாம் அழைக்கப்படுகிறார்கள்

பிரேம் ராவத் அவர்களின் செய்தியில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

பிள்ளைகள்

இந்த நிகழ்வு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.

நுழைவுசீட்டுக்கள்

புதிய திகதி: டிக்கெட் விற்பனை மே 31 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு BST (இங்கிலாந்து நேரம்) தொடங்கும்.

அரங்கிற்குள் நுழையும்போது, உங்கள் அச்சிடப்பட்ட டிக்கெட்டில் அல்லது உங்கள் தொலைபேசியில் உள்ள எலக்ட்ரானிக் டிக்கெட்டில் இருக்கும் பார் குறியீடு தெரியக்கூடியதாக கையில் வைத்திருங்கள்.

எந்தவொரு காரணத்தினாலாவது உங்களால் டிக்கெட் வாங்க முடியவில்லை என்றால், தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் brightonhelpdesk2024@gmail.com.

நுழைவுசீட்டு கட்டணங்கள்

    • 125 பிரிட்டிஷ் பவுண்டுகள் + டிக்கெட் ஏஜென்சி கட்டணம்
    • 95 பிரிட்டிஷ் பவுண்டுகள் + டிக்கெட் ஏஜென்சி கட்டணம்
    • 45 பிரிட்டிஷ் பவுண்டுகள் + டிக்கெட் ஏஜென்சி கட்டணம்
    • 20 பிரிட்டிஷ் பவுண்டுகள் + டிக்கெட் ஏஜென்சி கட்டணம்

ஒவ்வொரு நபரும் ஒரே நேரத்தில் 4 இருக்கைகளை வாங்க முடியும். இருப்பினும், பயன்படுத்தப்படும் என்று உங்களுக்குத் தெரிந்த இருக்கைகளை மட்டும் வாங்கவும்.

டிக்கெட் மாஸ்டர் மூலம் நுழைவுசீட்டுக்கள் விற்பனை செய்யப்படும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் செயல்முறையை விரைவுபடுத்த விரும்பினால், கீழுள்ள பக்கத்தின் Sign in / Register என்பதை அழுத்தவும்.

பணத்தைத் மீளப் பெற முடியாது.

(டிக்கெட் விற்பனை தொடங்கியதும், மேலே உள்ள பட்டனை அழுத்தி, நேரடியாக அந்த பக்கத்திற்கு செல்ல முடியும்.)

நிகழ்வைப் பதிவு செய்யவோ படமெடுக்கவோ வேண்டாம்

அதிகாரப்பூர்வ பதிப்புரிமை பாதுகாக்கப்படுகிறது. யாரேனும் பதிவுசெய்தலைக் கண்டறிந்தால் நிறுத்தும்படி கேட்கப்படுவார்கள். மேலும் தொடர்ந்தால், அவர்கள் மண்டபத்திலிருந்து அகற்றப்படுவார்கள்.

இந்நிகழ்ச்சி படமாக்கப்படும். ஒரு டிக்கெட்டை வாங்குவதன் மூலம், படமாக்கப்படுவதற்கான உங்கள் ஒப்பந்தம், மற்றும் அச்சு, சமூக ஊடகம், புகைப்படம், ஆடியோ, வீடியோ அல்லது பிற ஊடகங்களில் உங்கள் படம்/குரல் சேர்க்கப்படுவதற்கான அனுமதி ஆகிய இரண்டும் உள்ளடங்குகிறது. நீங்கள் மற்றொரு நபருக்கான டிக்கெட்டை வாங்குகிறீர்கள் என்றால், நிகழ்வில் அவர்கள் கலந்துகொள்வதனால், அதே ஒப்பந்தம் மற்றும் அனுமதியை குறிக்கின்றது.

கட்டிடத்திற்குள் நுழையும் போது பாதுகாப்பு சோதனைகள் இருக்கும். பொதிகள், முதுகுப்பைகள் அல்லது பெரிய அளவிலான பைகள் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

தயவுசெய்து கருத்தில் கொள்ளவும்: உங்கள் டிக்கெட்டை வாங்கும் வரை பயண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இருக்கைகளைக் கோரும் நபர்களின் எண்ணிக்கை இடத்தின் கொள்ளளவை விட அதிகமாக இருக்கலாம்.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கவனத்திற்கு: UK க்கு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை, இருப்பினும், உங்களைப் பாதிக்கக்கூடிய தற்போதைய நிபந்தனைகள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.

டிக்கெட் வாங்குவதற்கான உதவி

ஆன்லைன் டிக்கெட்டுகளை கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் வாங்கலாம். நீங்கள் வாங்கத் தொடங்கும் முன், உங்கள் இணைய உலாவி வரலாற்றைக் (internet browser history) காலி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

ஆன்லைன் டிக்கெட் வாங்கும் செயல்முறையின் போது நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். அதிகமானோர் ஒரேயடியாக வாங்க முயல்வதால், ‘இருக்கைகள் இல்லை’ என்ற தானியங்கி செய்தி உருவாகலாம், இது நிகழ்சிக்கான நுழைவுசீட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று அர்த்தமல்லt.

தயவுசெய்து பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்:
– நிகழ்வுக்கான நுழைவுசீட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதா என்பதைச் சரிபார்க்க பார்க்க www.wopg.org ஐப் பார்க்கவும்
– சில நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் தொடங்கவும்
– மற்றொரு சாதனத்தில் மீண்டும் முயற்சிக்கவும்
– நீங்கள் வெற்றிபெறவில்லை என்றால், brightonhelpdesk2024@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதா?

நீங்கள் வாங்க முயலும்போது டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டால், சில மணி நேரத்தில் திரும்பவும் முயற்சி செய்யுங்கள், ஏனெனில் நிறுத்திவைக்கப்பட்ட டிக்கெட்டுகள் மீண்டும் கிடைக்கக்கூடும். மீளப்பெறப்பட்ட டிக்கெட்டுகளைப்பற்றி அறிய விரும்பினால், தொடர்பு கொள்ளவும் brightonhelpdesk2024@gmail.com.

மீளப்பெறப்பட்ட டிக்கெட்டுகள் இல்லை என்றால், நீங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவீர்கள்.

பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளைத் திரும்பப் பெறுதல்

உங்கள் திட்டங்கள் மாறி, உங்களிடம் பயன்படுத்தப்படாத டிக்கெட் இருந்தால், தயவுசெய்து உங்கள் டிக்கெட்டின் மின்னணு பதிப்பை அனுப்பவும் brightonhelpdesk2024@gmail.com.

இந்த முகவரிக்கு திரும்பிய டிக்கெட்டுகள், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மற்ற நபர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மீண்டும் ஒதுக்கப்படும்.

பணத்தைத் திரும்பப்பெற முடியாது.

சிறப்புத் தேவைகள்

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோருக்கு உதவிகள் வழங்கப்படும்.

சகலவிதமான சக்கர நாற்காலி முன்பதிவுகளுக்கும், நீங்கள் பாக்ஸ் ஆபிஸை brightoncentre@brighton-hove.gov.uk  என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது 01273 292695 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் (பாக்ஸ் ஆபிஸ் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் ).

உங்கள் கேட்கும் திறன் கடினமாக இருந்தால், மேம்படுத்தப்பட்ட ஆங்கிலத்தில் ஒரு சேனல் கிடைக்கும். உங்கள் அடையாள அட்டைக்கு ஈடாக ஹெட்செட்கள் மண்டப வாயிலில் கிடைக்கும்.

மொழிபெயர்ப்பு

இந்நிகழ்வு ஆங்கிலத்தில் நடைபெறும். இந்தி, தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு வழங்கப்படும்.

உங்கள் அடையாள அட்டைக்கு ஈடாக ஹெட்செட்கள் மண்டப வாயிலில் கிடைக்கும்.

பொதிகள்

பொதிகள், முதுகுப்பைகள் அல்லது பெரிய அளவிலான பைகள் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

ஆடை மற்றும் வசதிகள் கொண்ட அறைகள் எதுவும் இல்லை.

உதவிகள்

உதவிகள் தேவையா?

தொடர்புகளுக்கு brightonhelpdesk2024@gmail.com.

பிரேம் ராவத் அவர்களின் எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகள் மற்றும் புதிய விடயங்கள் பற்றி தெரிந்து கொள்ள, WOPG இன் அஞ்சல் பட்டியலில் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் வசிக்கும் நாடு போன்ற விபரங்களை இணைத்துக்கொள்ளுங்கள். கீழே பதிவு செய்யவும்.