Photo courtesy of TimelessToday
2023 ஆம் ஆண்டு முடிவடையும் இத்தருவாயில் , பிரேம் ராவத் அவர்களின் 66வது பிறந்த தினத்தையொட்டி, டிசம்பர் 9 சனிக்கிழமை, மற்றும் டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமைஆகிய தினங்களில், மலேசியாவின் கோலாலம்பூரில் இரண்டு நாட்கள் கொண்ட கொண்டாட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறோம்.
அவரது அயராத முயற்சியின் மற்றொரு வருடத்திற்கான பாராட்டு மற்றும் நன்றியுணர்வுடன் இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நேரில் கலந்துகொள்ளலாம் . அல்லது நேரலை (லைவ்ஸ்ட்ரீம்) மூலமாக பார்க்க விரும்பினால் TimelessToday இன் அறிவிப்புகளைப் பார்க்கவும்.
நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி பற்றிய முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள, இந்தப் பக்கத்தை கவனமாகப் படிக்கவும். உங்கள் வருகையைத் திட்டமிடும்போது அவசியம் இந்தத் தகவல்களைப் பார்க்கவும்.
எப்போது, எந்த இடத்தில்
திகதி
சனிக்கிழமை, டிசம்பர் 9,2023 (பொது நிகழ்ச்சி)
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 10, 2023(பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு)
நேரம்
பொது நிகழ்ச்சி தொடங்கும் நேரம் பிற்பகல் 4:00மணி (MYT). நிகழ்ச்சி மண்டபத்தின் கதவுகள் பிற்பகல் 3:00மணிக்கு திறக்கப்படும்.
பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி தொடங்கும் நேரம் பகல் 11:00மணி (MYT). நிகழ்ச்சி மண்டபத்தின் கதவுகள் காலை 10:00மணிக்கு திறக்கப்படும்.
நடைபெறும் இடம்: MITEC, Hall 6, Kompleks MITEC No. 8, Jalan Dutamas 2, 50480 Kuala Lumpur, Malaysia
யாரெல்லாம் அழைக்கப்படுகிறார்கள்
பிரேம் ராவத் அவர்களின் செய்தியில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவேற்கிறோம்.
பிள்ளைகள்
இந்த நிகழ்வு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.
நுழைவுச்சீட்டுகள்
வெளிநாடுகளில் வசிக்கும் பங்கேற்பாளர்களுக்கான டிக்கெட்டுகள் நவம்பர் 28 ஆம் தேதி செவ்வாய்கிழமை மலேசிய நேரப்படி மாலை 3 மணிக்கு விற்பனை செய்யப்படும்.
அரங்கிற்குள் நுழையும்போது, உங்கள் அச்சிடப்பட்ட டிக்கெட் தெரியக்கூடியதாக கையில் வைத்திருக்கவும் அல்லது தொலைபேசியில் உங்கள் மின்னணு டிக்கெட் (பார்கோடு) தெரியக்கூடியதாக கையில் வைத்திருக்கவும்.
எந்தவொரு காரணத்தினாலாவது உங்களால் டிக்கெட் வாங்க முடியவில்லை என்றால், தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் helpdesk@birthdaycelebrationkl.com
நுழைவுச்சீட்டு கட்டணங்கள்
- முன் இருக்கை: RM 700 + டிக்கெட் ஏஜென்சி கட்டணம் (நாள் ஒன்றுக்கு)
- பிரீமியம் பிரிவு: RM 375 + டிக்கெட் ஏஜென்சி கட்டணம் (நாள் ஒன்றுக்கு)
- பொதுவான டிக்கெட்டுகள்: RM 250 + டிக்கெட் ஏஜென்சி கட்டணம் (நாள் ஒன்றுக்கு)
ஒவ்வொரு நபரும் 4 இருக்கைகளை வாங்க முடியும். இருப்பினும், பயன்படுத்தப்படும் என்று உங்களுக்குத் தெரிந்த இருக்கைகளை மட்டும் வாங்கவும்.
பணத்தைத் மீளப்பெற முடியாது.
(டிக்கெட் விற்பனை தொடங்கியதும் , மேலே உள்ள பட்டனை அழுத்தி நேரடியாக அங்கு செல்லலாம்)
நிகழ்ச்சியை பதிவு செய்யவோ அல்லது படமாக்கவோ வேண்டாம்
அதிகாரப்பூர்வ பதிவு காப்புரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. யாரேனும் பதிவுசெய்தலைக் கண்டறிந்தால் நிறுத்தும்படி கேட்கப்படுவார்கள். தொடர்ந்தால், அவர்கள் இடத்தை விட்டு நீக்கப்படுவார்கள்.
இந்நிகழ்ச்சி படமாக்கப்படும். நீங்கள் ஒரு டிக்கெட்டை வாங்குவதனால், படமாக்கப்படுவதற்கான உங்கள் ஒப்பந்தம் மற்றும் அச்சு, சமூக ஊடகம், புகைப்படம், ஆடியோ, வீடியோ அல்லது பிற ஊடகங்களில், உங்கள் படம்/குரல் சேர்க்கப்படுவதற்கான அனுமதி,ஒப்பந்தம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும். நீங்கள் வேறொரு நபருக்கான டிக்கெட்டை வாங்குகிறீர்கள் என்றால், நிகழ்வில் அவர்கள் கலந்துகொள்வதனால், அதே ஒப்பந்தம் மற்றும் அனுமதியை உள்ளடக்கும்.
கட்டிடத்திற்குள் நுழையும்போது பாதுகாப்புச் சோதனை இருக்கும். பொதிகள், முதுகுப்பைகள் அல்லது பெரிய பைகள் எதுவும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
தயவுசெய்து கவனிக்கவும்: உங்கள் டிக்கெட்டை வாங்கும் வரை, பயண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இருக்கைகளைக் கோருபவர்களின் எண்ணிக்கை இடத்தின் கொள்ளளவை விட அதிகமாக இருக்கலாம்.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள்: Malaysiaக்கு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை, இருப்பினும், தற்போதைய பயண விதிகள் மற்றும் உங்களைப் பாதிக்கக்கூடிய பயணக் கட்டுப்பாடுகள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்க்கவும். (நாட்டிற்குள்நுழைவதற்குஉங்களுக்கு வசாீதேவைப்படலாம்.) மலேசியாவுக்கான வீசா விண்ணப்பங்கள் பற்றிய சில சமீபத்திய செய்திகள் இங்கே உள்ளன.
நுழைவுச்சீட்டு வாங்குவதற்கான உதவி
ஆன்லைன் டிக்கெட்டுகளை கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் வாங்கலாம். உங்கள் வாங்குதலைத் தொடங்குவதற்கு முன், உங்கள் இணைய உலாவி வரலாற்றைக் (internet browser history) காலி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் ஆன்லைன் டிக்கெட் வாங்கும் செயல்முறையின் போது நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதிக கோரிக்கைகள் இருப்பதானால் ‘இருக்கைகள் இல்லை’ என்று தானாக ஒரு செய்தி உருவாகும். இது நுழைவுச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று அர்த்தமல்ல.
தயவுசெய்து பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்:
– நுழைவுசீட்டுக்கள் விற்று முடிந்து விட்டதா என்பதை www.wopg.org இற்கு சென்று சரி பார்க்கவும்
– சில நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் தொடங்கவும்
– மற்றொரு சாதனத்தில் மீண்டும் முயற்சிக்கவும்
– எதுவுமே சாத்தியப்படவில்லையென்றால், இவ்விலாசத்திற்கு மின்னஞ்சல் அனுப்பவும் helpdesk@birthdaycelebrationkl.com
நுழைவுச்சீட்டுகள் விற்று முடிந்து விட்டதா ?
நீங்கள் வாங்க முயலும்போது டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டால், இரண்டு மணிநேரத்தில் திரும்பி வாருங்கள், ஏனெனில் நிறுத்திவைக்கப்பட்ட டிக்கெட்டுகள் மீண்டும் கிடைக்கக்கூடும். மீளப்பெறப்பட்ட டிக்கெட்டுகளைப் பற்றி அறிய விரும்பினால், தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்: helpdesk@birthdaycelebrationkl.com.
மீளப்பெறப்பட்ட டிக்கெட்டுகள் ஏதும் இல்லை என்றால், நீங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவீர்கள்.
பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளை மீளப் பெறுதல்
உங்கள் திட்டங்கள் மாறி, உங்களிடம் பயன்படுத்தப்படாத டிக்கெட் ஏதேனும் இருந்தால், தயவுசெய்து உங்கள் டிக்கெட்டின் மின்னணு பதிப்பை இவ்விலாசத்திற்கு அனுப்பவும்: helpdesk@birthdaycelebrationkl.com.
இந்த முகவரிக்குத் திரும்பிய டிக்கெட்டுகள், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மற்றவர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மீண்டும் ஒதுக்கப்படும்.
பணத்தை மீளப் பெற முடியாது.
சிறப்புத் தேவைகள்
சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.
சக்கர நாற்காலிக்குரிய இடம் அல்லது பராமரிப்பாளர் இருக்கை ஆகியவற்றை வாங்குவதில் ஏதேனும் சிரமங்களை நீங்கள் சந்தித்தால், தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் helpdesk@birthdaycelebrationkl.com.
நீங்கள் கேட்கும் திறன் குறைபாடுடையவராக இருந்தால், ஆங்கிலத்தில் ஒரு அலைவரிசை கிடைக்கும்.
மொழிபெயர்ப்பு
இந்நிகழ்வு ஆங்கிலத்தில் நடைபெறும். இந்தி, மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்ப்பு வழங்கப்படும்.
ஹெட்செட்களை மண்டப வாயிலில் பெற்றுக்கொள்ளலாம்.
பயணப் பொதிகள்
பொதிகள், முதுகுப்பைகள் அல்லது பெரிய பைகள் எதுவும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
ஆடை மாற்றும் வசதிகள் கொண்ட அறைகள் எதுவும் இல்லை.
உதவி
உதவி தேவையா?
தொடர்புக்கு: helpdesk@birthdaycelebrationkl.com.
எதிர்வரும் காலங்களில் நடக்கவிருக்கும் பிரேம் ராவத்துடனான நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகளையும் மற்றும் புதிதாக வரும் விடயங்களையும் தெரிந்து கொள்ள விரும்பினால் , உங்கள் மின்னஞ்சல் மற்றும் வசிக்கும் நாடு போன்ற விபரங்களை WOPG அஞ்சல் பட்டியலில் பதிவு செய்யலாம். இங்கே பதிவு செய்யவும்.