புகைப்படம்: நன்றி TimelessToday
இந்தக் குறுகிய காணொளியைக் காணுங்கள்
மொழிபெயர்க்கப்பட்ட வரிகளைப் பார்ப்பதற்கு , CC அல்லது ” என்பதை அழுத்தவும்.
பின்னர், உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்க சக்கரம் போன்ற குறியீடு மீது அழுத்தவும்.
நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி பற்றிய முக்கிய தகவல்களுக்கு இந்தப் பக்கத்தைக் கவனமாகப் படிக்கவும். நிகழ்சியில் கலந்துகொள்ளத் திட்டமிடும்போது இந்தத் தகவல்களைப் பார்க்கவும்.
UNCOVER LIFE (உயிர்வாழ்வை கண்டறிதல்)
பிரேம் ராவத் அவர்களுடன்
எப்போது
வெள்ளிக்கிழமை ஜூலை 3, சனிக்கிழமை ஜூலை 4 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 5 ஜூலை 2026
வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி, பிரிட்டிஷ் நேரப்படி (BST) மாலை 5 மணிக்கு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நாட்களின் நிகழ்ச்சி நிரல், நிகழ்ச்சி தேதி நெருங்கும்போது அறிவிக்கப்படும்.
வரவேற்பறைக் கதவுகள், வெள்ளிக்கிழமை மதியம் 1:30 மணிக்கும்.
யாருக்காக
பிரேம் ராவத் மற்றும் அவரது செய்தியில் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சி 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல.
நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெறும்.
இந்தி, தமிழ், இத்தாலியன், ஸ்பானிஷ், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்ப்பு வழங்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட ஆங்கிலத்திற்கென ஒரு சேனல் இருக்கும்.
வரவேற்பறையில் ஹெட்ஃபோன்கள் கிடைக்கும், அடையாள அட்டையை வழங்கி பெற்றுக்கொள்ளலாம்.
எங்கே
Kings Rd, Brighton and Hove, Brighton BN1 2GR, United Kingdom
கட்டிடத்திற்குள் நுழையும்போது பாதுகாப்புச் சோதனை நடத்தப்படும். பயணப் பைகள், முதுகுப் பைகள் அல்லது பெரிய அளவிலான பைகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
வரவேற்பு மண்டபத்தில் குடிநீர் பெறக்கூடிய வசதிகள் இருக்கும், எனவே தயவுசெய்து உங்கள் சொந்த பாட்டிலைக் கொண்டு வாருங்கள்.
அங்கு செல்வது எப்படி
https://brightoncentre.co.uk/visiting-us/
ஐக்கிய ராஜ்ஜியத்திற்குச் செல்வதற்கு எந்தப் பயணக் கட்டுப்பாடுகளும் இல்லை. இருப்பினும், உங்களைப் பாதிக்கக்கூடிய தற்போதைய பயண நிபந்தனைகள் ஏதேனும் உள்ளதா என சரிபார்க்கவும். நாட்டிற்குள் நுழைய உங்களுக்கு ETA விசா தேவைப்படலாம்.
மேலும் அறிந்து கொள்ள
https://www.gov.uk/browse/visas-immigration.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் உள்ள இருக்கைகளின் அளவை விட, வரவிரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்பதால், உங்கள் நுழைவுசீட்டை வாங்கும் வரை பயண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக வந்து இருக்கைகளில் அமருமாறு கேட்டுக்கொள்கிறோம். மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, தாமதமாக வருபவர்கள் அரங்கத்தின் பின்புறத்தில் அமர்த்தப்படுவார்கள்.
நுழைவுசீட்டுகள் பற்றிய தகவல்களுக்கு இங்கே அழுத்தவும்
பிரைட்டன் அடுக்குகள் கொண்ட இருக்கைத் திட்டம்
நிகழ்வைப் பதிவு செய்யவோ அல்லது படம்பிடிக்கவோ வேண்டாம்
அதிகாரப்பூர்வ ஒலிப்பதிவு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டது. பதிவு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நிறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் தொடர்ந்தால், நிகழ்விடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்படும். நீங்கள் நுழைவுச்சீட்டு வாங்கும்போது, உங்களை படமாக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிப்பதோடு, சமூக ஊடகங்கள்,பிற ஊடகங்களில் உங்கள் உருவம்/குரல் இடம்பெறுவதற்கான அனுமதியையும் வழங்குகிறீர்கள். நீங்கள் வேறொரு நபருக்காக நுழைவுச்சீட்டு வாங்கினால், அந்த நிகழ்வில் அவர் கலந்துகொள்வதும் இதே ஒப்புதலையும் அனுமதியையும் அளிப்பதாகக் கருதப்படும்.
திரு பிரேம் ராவத் அவர்களுடன் இனி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகளை பெறுவதற்கு , உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் வசிக்கும் நாடு போன்ற விபரங்களை WOPG அஞ்சல் பட்டியலில் பதிவு செய்து கொள்ளுங்கள். கீழே பதிவு செய்யவும்.